Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ நகரில் காலி (Vacant) வீடுகளுக்கான வரி அறவீட்டுத் திட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அறவீட்டுத் திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகரின் சில உறுப்பினர்கள் குறித் சட்டத்தை முழுமையாகவே ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.

எனினும் எதிர்வரும் ஆண்டிலும் இந்த காலி வீடுகளுக்கு நகராட்சி நிர்வாகம் வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

நகரில் நிலவி வரும் குடியிருப்பு பற்றாக்குறை காரணமாக இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

சிலர் வீடுகளில் வசித்து வரும் நிலையில் , வீடு காலியாக இருப்பதாகத் தெரிவித்து வரி அறவீட்டு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், காலி வீடுகளுக்கான வரி அறவீட்டு நடைமுறை ரத்து செய்யப்படாது என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.