Reading Time: < 1 minute
காலநிலை மாற்றம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிக அளவில் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய குழந்தைகள் நலச் சங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவியதுடன், அனல் காற்றும் வீசியது.
எனினும், அவ்வப்போது கனடாவின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதுடன், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகின்றது.
இந்தநிலையிலேயே காலநிலை மாற்றம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிக அளவில் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக கனேடிய மாநில அரசாங்கங்கள் அவதானம் செலுத்த வேண்டியது அசியமானது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.