கனடாவில் கார்பன் வரி அறவீடு இடைநிறுத்தப்படும் என லிபரல் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடும் கரீனா கோல்ட் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அவை தலைமை பொறுப்பை துறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த பதவி வெற்றிடத்திற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் கோல்டும் கட்சி தலைமை பதவிக்காக போட்டியிடுகின்றார்.
கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் பிரசார பணிகளை ஆரம்பித்து உரையாற்றிய போது கோல்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கார்பன் வரி அறவீடு இடைநிறுத்தப்படும் எனவும் எவ்வாறினும் கார்பன் வரியை முற்றுமுழுதாக ரத்து செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கார்பன் வரி அறவீடு குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இலத்திரனியல் வாகனங்கள் மற்றும் கலப்பு வாகனங்கள் சலுகை வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மூலதன ஆதாய வரி அறவீடு குறித்த சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.