Reading Time: < 1 minute
அண்மையில் களவாடப்பட்ட தமது கிரீடத்தை மீள ஒப்படைக்குமாறு பழங்குடியினத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிப்ஸிங் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான ஸ்கொட் மெக்லியோட் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மிஸ்ஸிசாகுவாவில் ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இந்த கிரீடம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு இந்த வாகனம் களவாடப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரீடத்தை அனாமேதய அடிப்படையில் மீள ஒப்படைக்குமாறு பழங்குடியினத் தலைவர் கோரியுள்ளார்.
இந்த கிரீடத்தில் கழுகுகளின் 7 இறகுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பொருள் என்பதனால் அதனை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.