கல்கரியில் மிருகக்காட்சி சாலையில் மனித தவறினால் இரண்டரை வயதான கோரில்லா ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கடந்த 12 ஆம் திகதி இந்த மனித தவறு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு தாழ்நில கோரில்லா ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த கோரில்லாவுக்கு ஐரா என பெயரிடப்பட்டுள்ளது.
ஏனைய கொரில்லாக்களுடன் குறித்த கொரில்லாவுக்கு பயிற்சி அளித்த போது ஏற்பட்ட மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவர் தவறுதலாக கோரில்லாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியின் பிழையான கதவை மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது குறித்த ஐரா கதவின் சிக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளது.
படுகாயம் அடைந்த கொரில்லாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி கோரில்லா உயிரெழுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மிருகக்காட்சி சாலை சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.