வீட்டிலேயே கல்வி கற்க விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு வழிவகை செய்யும் திட்டமொன்றை உருவாக்கி வருவதாக, வன்கூவர் பாடசாலை சபை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மாணவர்களை பாடசாலைக்கு திருப்பி அனுப்புவது குறித்து பெற்றோர் மத்தியில் உள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்க, தற்காலிக மாற்றம் கலந்த திட்டம் உருவாக்கப்படுவதாக பாடசாலை சபை அறிவித்தது. மேலும் வபவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.
இணையத்தில் பாடசாலை சபையால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘இது செப்டம்பர் மாதத்தில் பாடசாலை தொடங்கும் போது தங்கள் குழந்தைகளை நேரில் பயிற்றுவிக்கத் தயாராக இல்லாத குடும்பங்களுக்கானதாக இருக்கும்.
இது ஒரு தற்காலிக மாற்றம் விருப்பமாக இருக்கும். இது மாணவர்கள் தொலைதூரத்தில் கற்கவும், மாவட்டத்திலிருந்து சில கற்றல் ஆதரவைப் பெறவும் அனுமதிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.