கனடாவின் வைத்தியசாலைகளில் நோயாளிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சளிக்காய்ச்சல் காரணமாக இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
மாகாண வைத்தியசாலைகளில் இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை குவியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வைத்தியசாலைகளில் வழமையாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளது.
தங்களது பிள்ளைகள் வைத்தியசாலைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளமை குறித்து பெற்றோர் கவலை கொண்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏட்ரியன் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைக்கு சத்திர சிகிச்சைகளை ரத்து செய்யும் அளவிற்கு சளிக் காய்ச்சல் நோயளார் எண்ணிக்கை உயர்வடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிறு பிள்ளைகள் பாரதூரமான சளிக்காய்ச்சல் மற்றும் சுவாசப்பை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர சிக்கிச்சைப் பிரிவில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.