ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை கனடா அதிகாரிகள் சிறைப்பிடித்ததாக செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை சிறைப்பிடித்துள்ளதாக கனடா போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், எதற்காக அந்த விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விடயங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அந்த விமானம் Yellowknife நகர விமான நிலையத்தில் சிறைப்பிடித்துவைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட விமானம் அந்த தடையை மீறியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகள் குறித்து அறிவித்த கனடா, பிப்ரவரி 24 முதல் தனது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
அத்துடன், துறைமுகங்களிலும் ரஷ்ய கப்பல்களுக்கு அனுமதி இல்லை.
இதற்கிடையில், தனியுரிமை சட்டத்தின்படி, சிறைப்பிடிக்கப்பட்ட விமானத்தில் பயணித்த ரஷ்யர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.