கனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை அரை வீதத்தினால் இன்று உயர்த்தியுள்ளதாக (Dec 7, 2022) அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இன்றுமுதல் மத்திய வங்கியின் வட்டிவிகிதம் 4.25% ஆக உயர்வடைகின்றது.
பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பணவீக்கத்திற்கு எதிரான போரில் மத்திய வங்கி இந்த ஆண்டு 7 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
எதிர்வரும் 2023ம் ஆண்டில் பணவீக்கம் மூன்று வீதமாக குறைவடையும் எனவும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் 2 வீதமாக பேணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.