Reading Time: < 1 minute
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைய தினம் (15) ஆசியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றார்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் செய்ய உள்ளார்.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
உலகம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் பிரதமர் ட்ரூடோ, தென் கொரியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 19ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறவுள்ள ஜீ7 தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்ற உள்ளார்.