கனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு மாயமானார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், காரின் பின் இருக்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் அவர்.
ஐந்து ஆண்டுகளுக்குமுன் மாணவர் விசாவில் கனடா சென்ற ஷர்மா, படித்து முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்று, நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்தார்.
புத்தாண்டு தினத்தன்று மாயமான ஷர்மா, கார் ஒன்றின் பின் இருக்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மொபைல், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரது ஏடிஎம் அட்டை ஆகியவை காணாமல் போயிருப்பதால், கொள்ளையர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
தந்தை விடுத்துள்ள கோரிக்கை
ஷர்மாவின் தந்தையான Tarlok Nath, இந்தியாவில் ரிசர்வ் பொலிசாக பணியாற்றி வருகிறார். ஷர்மாவின் மரணம் குடும்பத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மகன் மரணம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கி குற்றவாளிகளைக் கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் Tarlok Nath.