கனடிய விமான நிலையத்தில் காணாமல் போன பாரியளவு தங்கம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
சுமார் 24 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் இவ்வாறு காணாமல் போயிருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த தங்கம் காணாமல் போயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் எயார் கனடா நிறுவனத்திற்கும் விமான நிலைய பாதுகாப்பு நிறுவனத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
தங்கம் காhணமல் போனமைக்கு எயார் கனடா விமான நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டுமென குறித்த பாதுகாப்பு நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இந்த காணாமல் போன சம்பவத்துடன் தொடர்பு கிடையாது என எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
டொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 24 மில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் களவாடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இயங்கி வந்த பாதுகாப்பு நிறுவனமான பிரிங்க்;ஸ் என்ற நிறுவனம் எயார் கனடா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளது.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான நிலைய களஞ்சிய சாலையில் இருந்து இந்த தங்கம் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது நிறுவனம் அசட்டையாக செயற்படவில்லை என் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.