கனடிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அதிக அளவு வரி செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் குடும்பங்கள், பெருந்தொகையை வரிக்காக செலவிடுகின்றனர் என அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரேசர் நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்று தங்களது வருமானத்தில் 43 வீதம் வரையில் வரியாக செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரிகளில் அனேகமானவை மறைமுக வரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் சராசரி குடும்பம் ஒன்று வருடாந்த வருமானமாக 109235 டொலர்களை பெற்றுக் கொள்வதாகவும், இதில் 46988 டொலர்களை வரியாக செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1961 ஆம் ஆண்டில் சராசரி வருமானம் 5000 டொலர்கள் எனவும் இதில் 1625 டொலர்கள் வரியாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.