Reading Time: < 1 minute

கனடிய சனத்தொகை மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் கனடிய மக்களிடம் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

கோவிட்19 பெருந்தொற்றின் புதிய திரிபுகள் தொடர்ச்சியாக உருவாகி வரும் நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் சுமார் 75 வீதமானவர்கள் கோவிட்19க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தடுப்பு மருந்துகள் ஊடாகவும் நோய்த் தாக்கம் ஊடாகவும் பெரும்பான்மையானவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.