Reading Time: < 1 minute

கனடாவில் பெண் ஒருவர் கரடி தாக்கி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

புளுபெரி காய்களை பறித்துக் கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கி கொன்றதாக முன்னதாக கருதப்பட்டது.

எனினும் மரண விசாரணைகளின் போது இந்த பெண்ணை கரடி தாக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணை நாய்கள் தாக்கியுள்ளதாக மரபணு பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

54 வயதான பிங் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

குறித்த பகுதியில் 17 மாதங்களின் பின்னர் மற்றுமொரு நபர் உயிரிழந்த போது மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின் போது இந்த தாக்குதல்களை கரடிகள் மேற்கொள்ளவில்லை எனவும், நாய்களின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.