எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் கனடாவின் முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
குறிப்பாக பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ, பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் மற்றும் என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ஆகியோரை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் வாயிலாக கடந்த மே மாதம் பத்தாம் திகதி கனடிய பிரதமரை படுகொலை செய்வதாக பதிவிடப்பட்டிருந்தது.
23 வயதான கல்கரியை சேர்ந்த மேசன் ஜோன் பேகர் என்பவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் இந்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, 67 வயதான கெரி பெல்ஸ்விக் என்ற நபரும் பிரதமரை படுகொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெல்ஸ்விக் எட்மோன்டனைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.