கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் ஆதரவு பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கும் பொருத்தமற்றவர் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பினை வேறு ஒருவர் ஏற்றுக் கொள்வது பொருத்தமானது என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமரின் எதிர்கால அரசியல் வாழ்வு தொடர்பில் கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பலரும் லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவது பொருத்தமானது என கருத்து வெளியிட்டுள்ளனர்.
வெறும் 17 வீதமானவர்கள் மட்டுமே ட்ரூடோ தொடர்ந்தும் தலைமை பதவியில் நீடிக்க வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனையவர்கள் ட்ரூடோ தலைமை பதவியில் நீடிப்பதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.