Reading Time: < 1 minute

கனடிய தபால் திணைக்களம் முழு வீச்சில் இயங்க தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உரிய நேரத்தில் தபால்களை விநியோகம் செய்ய முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக பொதிகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும் கடிதங்கள், பட்டியல்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதில் சிறியளவிலான கால தாமதம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக சுமார் மூன்று வாரங்கள் வரையில் தபால் திணைக்களப் பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.