கனடிய எல்லைப் பகுதியில் ஏதிலிகள் குறித்த சட்டம் கடுமையாக்கப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏதிலி அந்தஸ்து கோரும் நபர்கள் சட்டத்தரணியின் ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஏதிலி அந்தஸ்து கோருவோருக்கு கனடிய எல்லை பகுதியிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனடியே எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை அமெரிக்க மெக்சிகோ எல்லையில் இருந்து பிரவேசிக்கும் எண்ணிக்கை விடவும் குறைவானது.
எனினும் அண்மைக்காலமாக கனடாவில் இருந்து அமெரிக்காவில் பிரவேசிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏதிலிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.