Reading Time: < 1 minute

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார்.

லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம் ஆட்டம் காணும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து என்.டி.பி கட்சி உறுதியான தீர்மானங்கள் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.