கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று கடந்த ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளியானது.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண் ஜாமீனில் வெளியிலிருந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
1997ஆம் ஆண்டு, இந்திய வம்சாவளியினரான ரீனா விர்க் (Reena Virk) என்னும் இளம்பெண், ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள் மற்றும் ஒரு பையனால் கொல்லப்பட்டார்.
ரீனாவின் தந்தையான Manjit Virk இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர், தாய் Suman Virk, இந்திய கனேடியர்.
தன் தோற்றம் குறித்து சுயபச்சாதாபம் கொண்ட ரீனா, சக மாணவ மாணவிகளால் தொடர்ந்து வம்புக்கிழுக்கப்பட்டார்.
1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி ரீனா மாயமானார். நவம்பர் மாதம் 22ஆம் திகதி, அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ரீனா கொலை தொடர்பில் கெல்லி எல்லார்ட், நிக்கோல் குக், நிக்கோல் பாட்டர்சன், மிஸ்ஸி கிரேஸ், கோர்ட்னி கீத், கெயில் ஊம்ஸ் என்னும் ஆறு பதின்மவயதுப் பெண்களும், வாரன் க்லோவாட்ஸ்கி என்னும் பையனும் கைது செய்யப்பட்டார்கள்.
ரீனாவின் கொலை வழக்கு, Under the Bridge என்னும் பெயரில் கடந்த ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளியானது.
இவர்களில் கெல்லி எல்லார்ட், தற்போது கெர்ரி சிம் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்துவருகிறார்.
15 வயதில் கைது செய்யப்பட்ட கெர்ரிக்கு இப்போது 41 வயது ஆகிறது.
கெர்ரி ஜாமீனில் வெளிவந்தபோது ஒருவருடன் பழகியதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார்.
ஜாமீனில் விடுவிக்கப்படும்போதே, கொல்லப்பட்ட ரீனாவின் குடும்பத்தினர் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, அவர்களை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது என்னும் பல நிபந்தனைகளின் பேரில்தான் கெர்ரி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக, நேற்று கெர்ரி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் என்ன நிபந்தனையை மீறினார் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.