கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துவருவது அனைவரும் அறிந்ததே.
ஆனால், கனேடிய மாகாணங்கள் சிலவற்றிற்கு பதிலாக, தான் கலிபோர்னியா முதலான சில மாகாணங்களை முன்னர் ட்ரம்பிடம் கேட்டதாக தற்போது தெரிவித்துள்ளார் ட்ரூடோ.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தான் ட்ரம்பை சந்தித்தபோது, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பது குறித்த திட்டம் குறித்து அவர் தன்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
அப்போது, கனேடிய மாகாணங்கள் சிலவற்றிற்கு பதிலாக, ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்களான கலிபோர்னியாவையும் Vermontஐயும் தரவேண்டுமென தான் வேடிக்கையாக ட்ரம்பிடம் கேட்டதாக தற்போது தெரிவித்துள்ளார் ட்ரூடோ.
அப்போது இருவரும் ஜோக்கடித்து பேசிக்கொண்டதாக ட்ரூடோ கூறியுள்ளார்.
ஆனால், ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் விடயத்தை விடவில்லை.
அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.
இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகிதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அப்படி அவர் வரி விதித்தால், அதனால் ஏற்படப்போகிற தாக்கம் குறித்த விடயத்திலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காகவே ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.
Comments are closed, but trackbacks and pingbacks are open.