Reading Time: < 1 minute

கனடாவின் பிரம்டன் பகுதியில் ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இளம் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என குறித்த ஹோமியோபதி மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

62 வயதான சுனில் ஆனந்த் என்ற ஹோமியோபதி மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சம்மத்தப்பட்டுள்ளது என்பதுடன் குறித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்

மருத்துவ பரிசோதனைகளின் போது குறித்த மருத்துவர் முறை தவறி நடந்து கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும் இளம் நோயாளி ஒருவர் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பீல் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த மருத்துவர் மேலும் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு இருக்கலாம் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மருத்துவரினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.