Reading Time: < 1 minute

கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறைந்த சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளுக்கு, வேறும் நாடுகளில் இருந்து பிரஜைகளை அழைத்து வருவதனை வரையறுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு லிபரல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது லிபரல் கட்சியின் கொள்கை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் லிபரல் அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் வர்த்தக நிறுவனங்கள் எதிர்நோக்கிய ஆளணி வளப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு கூடுதல் அளவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டின் பொருளாதார நிலைமை மாற்றமடைந்துள்ளதாகவும் இதனால் கனடாவிற்கு அதிக எண்ணிக்கையிலான தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் தேவை கிடையாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனடிய வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்நாட்டு கனடியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கனடிய நிறுவனங்கள் குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழிய படையை நம்பி இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழிய படையை நம்பி இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.