கனடாவில் வீதியை மறித்து போராட்டம் நடத்திய ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் வீதி போக்குவரத்தை தடை செய்யும் வகையில் குறித்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ஒருவருக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றையவருக்கு 100 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மார்கோ வேன் ஹியுஜினபோஸ் என்ற நபருக்கு நீதிமன்றம் 4 மாத சிறை தண்டனையை விதித்துள்ளது.
ஜெராட் ஜென்சன் என்பவருக்கு நூறு மணித்தியால சமூக சேவையில் ஈடுபடுமாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் இந்த இருவரும் கோவிட் சுகாதார விதிமுறைகளை எதிர்த்து வீதியை மறித்து போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் நீதிமன்ற தண்டனை விதித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.