கனடாவில் வீட்டு வாடகை செலுத்தாத குடியிருப்பாளர் ஒருவரினால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ள பெண் வாடகை குடியிருப்பாளர் சுமார் 41600 டொலர் வாடகையும் சுமார் 5000 டொலர் நீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவரே குறித்த குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த பெண் குறித்த வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோவின் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினர், இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர்.
ஓய்வூதிய முதலீடாக குறித்த குடியிருப்பினை கொள்வனவு செய்து வாடகைக்கு விட்டதாக தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் குறித்த வாடகை குடியிருப்பாளர் நிலுவை வாடகையை செலுத்தாத காரணத்தினால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல் 9 மாதங்களில் குறித்த பெண் சரியாக வாடகை செலுத்தி வந்தார் என தெரிவித்துள்ளனர்.
எனினும் அதன் பின்னர் வாடகை கிரமமாக செலுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு வீட்டு உரிமையாளர்கள் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறித்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனும் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வாடகை குடியிருப்பாளர் இவ்வாறு நிலுவையை செலுத்தாத காரணத்தினால் தாம் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இந்த தம்பதியினர் குறிப்பிடுகின்றனர்.
உரிய முறையில் வாடகை செலுத்தாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உரிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை என குறித்த தம்பதியினர் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.