கனடாவில் வீட்டு வாடகை தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதத்தில் அநேகமான மாகாணங்களில் வாடகை தொகை சராசரியாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மிக அதிக அளவில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் அதற்கு அடுத்தபடியாக ஒன்றாரியோ மாகாணத்தில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தில் சராசரி மாத வாடகை தொகையானது 2332 டாலர்களாக காணப்பட்டது, இது அதற்கு முந்தைய மாதத்தை விடவும் மூன்று தசம் ஒரு வீத அதிகரிப்பு என்பதுடன் வருடாந்த அடிப்படையில் நோக்கினால் 15 தசம் இரண்டு வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோவில் வருடாந்த சராசரி வாடகை அதிகரிப்பு வீதம் 24% உயர்வடைந்துள்ளது.
டொரன்டோ பெரும்பாக பகுதிகளிலும் அதற்கு வெளியிலும் சராசரி வாடகை தொகை வெகுவாக அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தேசிய இணைய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.