கனடாவின் கரையோர பகுதியில் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது வீட்டு பிரச்சனைக்கு வித்தியாசமான முறையில் தீர்வு கண்டுள்ளனர்.
நோவா ஸ்கோட்டியாவின்டாட் மவுத் பகுதியில் 1500 டாலர்கள் மாதத்திற்கு செலவிட்டு ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.
எனினும் பொருளாதார பிரச்சனை காரணமாக கூடுதல் தொகை வாடகையை செலுத்த அவர்களினால் முடியவில்லை.
அதனை தொடர்ந்து இந்த தம்பதியினர் பழைய பாடசாலை பஸ் ஒன்றை நடமாடும் குடியிருப்பாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
வாடகைக்கு செலவிட்ட பணத்தை தற்பொழுது இந்த தம்பதியினர் சேமித்து வருகின்றனர்.
இந்த பஸ் வீட்டை அமைப்பதற்கு கடின உழைப்பினை வெளிப்படுத்தியதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இதனை வீடாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பயணங்களை மேற்கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.