கனடாவில் வீட்டு அடகுக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்க நிலைமைகளினால் கனேடிய மத்திய வங்கி அண்மைய மாதங்களில் பல தடவைகள் வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் ஐந்து தடவைகள் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மாறும் அடகுக் கடன் வட்டி வீதம் என்ற அடிப்படையில் அடகுக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட்டி வீத அதிகரிப்பானது வீட்டு அடக்குக் கடன் பெற்றுக் கொண்டவர்களின் மாதாந்த அடகுக் கடன் தொகையை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் வட்டி வீதத்திற்கு இணங்க வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கும் கொடுகடன் வட்டி வீதங்களை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் மத்திய வங்கியின் வட்டி வீதமானது 3.25 வீதமாக உயர்த்தப்பட்டது. மாறும் அடகுக் கடன் தொகை நிபந்தனைக்கு உட்பட்டு அடகுக் கடன் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த வட்டி வீத அதிகரிபிற்கு ஏற்ற வகையில் கூடுதல் தொகையை செலுத்த நேரடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆயிரக் கணக்கான டொலர்களை கூடுதலாக கடன் பெற்றுக்கொண்டவர்கள் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.