கனடாவில் வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகள், கட்டிடங்கள் உடைக்கப்பட்டு திருடப்படுவதாகவும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்ளையிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆணடு இதுவரை காலமும் 1721 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ரொற்னரோ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 31.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 400 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
ஆயுத முனையில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரொறன்ரோவில் மட்டுமன்றி நோவா ஸ்கோஷியா, வான்கூவார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.