Reading Time: < 1 minute

கனடாவில் வீடு விற்பனையில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளது.

சில மாதங்கள் தொடர்ச்சியாக கனடாவில் வீடு விற்பனை வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து கனடாவில் வீடுகள் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஒக்ரோபர் மாதத்தில் வீடு விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தை விடவும் ஒக்ரோபர் மாதத்தில் வீடுகள் விற்பனை 1.3 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 36 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கனடாவில் ஒக்ரோபர் மாதத்தில் சராசரி வீடு ஒன்றின் விலை 644643 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.