Reading Time: < 1 minute

கனடாவில் சில உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன.

பணவீக்கம் காரணமாக கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளன.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மளிகைப் பொருட்களின் விலைகள் 11.4 வீதமாக பதிவாகியுள்ளது என்பதுடன் இது 1981ம் ஆண்டின் பின்னர் பதிவான அதிக வீதமாகும். மாஜரீன், பேஸ்டா, பட்டர், பால் உற்பத்திகள், முட்டை, காபி, தேயிலை, மரக்கறி, பழ வகைகள், மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.