Reading Time: < 1 minute

கனடாவிற்குள் வரும் பயணிகளை மீண்டும் கட்டாய கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை அமுல் செய்வதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். எழுமாறான அடிப்படையில் இந்த கட்டாய கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த நடைமுறையை கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் நான்கு பிரதான விமான நிலையங்களிலும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட விமானப் பயணிகளிடம் ஏழுமாறான அடிப்படையில் கட்டாய கோவிட் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

மருந்தகங்கள் அல்லது தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இந்த கோவிட் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

தடுப்பூசி ஏற்றப்படாத பயணிகள் நாட்டுக்குள் வந்து இறங்கிய முதல் நாள் மற்றும் 8ம் நாளில் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் எனவும் இந்த நடைமுறை வழமை போன்று அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.