Reading Time: < 1 minute
கனடாவில் விபத்துச் சம்பவமென்று குறித்த காணொளியை எடுப்பதற்காக சென்ற படப்பிடிப்பாளர் ஒருவர் விபத்தி சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
ஒன்றாரியோவின் வெலிங்டன் வீதி மற்றும் மால்ட்பே வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
Guelph பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்து குறித்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்த போது, வாகனமொன்றில் மோதுண்டு குறித்த படப்பிடிப்பு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் Stephanie Villella என்ற ஊடகவியலளாரே இவ்வாறு சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.