Reading Time: < 1 minute

கனடாவில் வாழ்பவர்களில் கால்வாசிபேர் புலம்பெயர்ந்தோர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கனடாவின் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை ஒன்று, கனேடியர்களில் கால்வாசிபேர் புலம்பெயர்ந்தோர் என்று தெரிவித்துள்ளது.

கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவிகிதத்தினர் புலம்பெயர்ந்தோர் என்கிறது கனடாவின் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை.

2041இல் நாட்டின் மக்கள்தொகையில் 29.1 முதல் 34 சதவிகிதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணித்துள்ளது அந்த அறிக்கை.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. மக்களில் முதுமையடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு ஈடுகொடுக்கும் அளவில் இல்லை. எனவே, பணி செய்வதற்கு கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர் தேவைப்படுகிறார்கள்.

இன்னொரு தகவல், 2016க்கும் 2021க்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் இந்தியர்கள். அந்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 18.6 சதவிகிதம் ஆகும்.