Reading Time: < 1 minute
கனடாவில் வாயு கசிவு காரணமாக பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டாவாவின் வெனியர் கிரென்வில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார்பன் மொனொக்ஸைட் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாயு கசிவு காரணமாக ஆறு பெரியவர்களும் நான்கு சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.