கனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த வாகனங்களின் பெறுமதி சுமார் பத்து மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ கார் கொள்ளை தடுப்பு விசேட படையணி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுமார் 124 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 750 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கனடாவில் இடம் பெற்று வரும் வாகன கொள்ளை சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.