Reading Time: < 1 minute

கனடாவில் வரி அறவீடு தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது.

கனடாவின் வரி அறவீடு செய்யும் நிறுவனமான கனேடிய வருமான முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

சுமார் 35000 பணியாளர்களைக் கொண்ட கனேடிய வருமான முகவர் நிறுவனத்தில் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் பூர்த்தியாகும் நிலையில் தொழிற்சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த மாதம் 30ம் திகதியுடன் வரி கோவைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் பூர்த்தியாகின்றது.

தொழில் உடன்படிக்கை மற்றும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தவிர்த்து பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட முடியும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.