கனடாவில் வயோதிபராசனத்தொகை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2073 ஆம் ஆண்டளவில் கனடாவின் மொத்த சனத்தொகை 63 மில்லியனை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது.
85 வயதிற்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி 2073 ஆம் ஆண்டில் கனடாவில் 85 வயதிற்கும் மேற்பட்ட வயோதிபர்களின் மொத்த எண்ணிக்கை 3.3 ஆக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பிறப்பு வீத பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் வயோதிப சனத்தொகையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கனடாவின் மனித வளத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கனடாவின் அபிவிருத்தியை உறுதி செய்ய வேண்டுமானால் குடிப்பெயர்வாளர்களை அதிகளவு உள்ளீர்க்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.