கனடாவின் மொத்த சனத்தொகையில் வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் கால்வாசிப் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கை எதிர்வரும் 2041 ஆம் ஆண்டு அளவில் மூன்றில் ஒரு பங்காக உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் அதிக எண்ணிக்கையிலான பங்கினை ஜி 7 நாடுகளை சேர்ந்த மக்கள் வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
கனடாவில் மொத்த சனத்தொகையில் தற்பொழுது சுமார் 23 வீதமான மக்கள் வெளிநாட்டு பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் சனத்தொகை வளர்ச்சியின் பிரதான எழுத்துக்களில் ஒன்றாக குடியேறிகள் காணப்படுகின்றனர்.
இந்த ஆண்டில் கனடா 4 லட்சத்து 31 ஆயிரத்து 645 வெளிநாட்டு பிரஜைகளை உள்வாங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
கனடாவின் நிலவிவரும் ஊழியப்படை பற்றாக்குறை காரணமாக இவ்வாறு வெளிநாட்டு பிரஜைகளுக்கு கனடாவில் தொழில்களில் ஈடுபடவும் நிரந்தரமாக பதியவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கனடிய தொழிற்சந்தையில் நிரம்பல் செய்யப்பட்ட ஊழிய வளத்தில் 80 வீதமானவை வெளிநாட்டு குடியேறிகள் என்பது குறிப்பித்தக்கது.