Reading Time: < 1 minute

கனடாவில் மிக மெதுவாக வாகனத்தைச் செலுத்தியதாக சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில், குறித்த சாரதி மெதுவாக வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய தடத்தில் குறித்த சாரதி 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தார் என குற்றம் சுமத்பத்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை மெதுவாக செலுத்துவது விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் பின்புறத்தில் ஏனைய வாகனங்கள் மோதக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மெதுவாக வாகனம் செலுத்துவதனால் ஏனைய சாரதிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் செயலுக்காக 150 முதல் ஆயிரம் டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.