கனடாவில் மீளவும் கோவிட் பெருந்தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகளினால் இவ்வாறு தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஒமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 ஆகிய ஒமிக்ரோனின் உப திரிபுகளினால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது தொற்று உறுதியளார் எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலை அனுமதி என்பன குறைந்தளவில் காணப்படுவதாக கனேடிய பொதுச் சுகாதார அலுவலக பிரதானி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
எனினும் நோய்த் தொற்று அதிகரிப்பு குறித்து போதியளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.