Reading Time: < 1 minute

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்க வீதத்திற்கு அமைவாக கலால் வரித் தொகை உயர்த்தப்படுவது ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

பியர், வைன் மற்றும் மதுபான வகைகளின் விலைகள் 6.3 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

விநியோகஸ்தர் விலை, ஏற்றுமதி இறக்குமதி வரி, கப்பல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதுபான வகைகளுக்கான விலை அதிகரிப்பு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒன்றாரியோ மாகாணத்தில் ஒவ்வொரு மதுபான உற்பத்தியின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.