Reading Time: < 1 minute
கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது.
லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது.
இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் மேற்கத்திய பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மைக்கேல் ஹான் கூறியுள்ளார்.