கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில கைது செய்பய்பட்டுள்ளார்.
இரண்டாண்டு காலமாக பல்வேறு நபர்களை குறித்த நபர் ஏமாற்றியுள்ளார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வீடுகளை புனரமைத்துக் கொடுப்பதாக முற்பணம் பெற்றுக் கொண்டு குறித்த நபர் மக்களை ஏமாற்றியுள்ளார்.
மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 58 வயதான மெலின்டிஜே ஜொகோவிக் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் பல வாடிக்கையாளர்களிடம் இவ்வாற முற்பணம் பெற்றுக் கொண்ட போதிலும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட தொகை இவ்வாறு முற்பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் இதுவரையில் முறைப்பாடு செய்யாமல் இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.