கனடாவில் எட்மாண்டன் பகுதியில் போலீசாருக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான தந்தை கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
28 வயதான மாத்தியுஸ் அர்கான்ஜெலொ என்ற நபரே இவ்வாறு கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தனது புதல்வர் தவறு இழைத்திருந்தால், அவரை கைது செய்து இருக்கலாம் என மாத்தியுஸின் தாயார் குறிப்பிடுகின்றார். உயிரை பறிப்பதற்கு பொலிசாருக்கு உரிமை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டையும் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு மாத கால பணி இடை நீக்கத்தின் பின்னர் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டமை அதிர்ச்சி அளிப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.