கனடாவில் போலி அலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியான அலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போலி அலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை இழந்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கனடாவில் தரமான ஓர் அலைபேசியை கொள்வதாக செய்வதற்கு சராசரியாக 2000 டாலர்கள் தேவைப்படுகின்றது.
எனினும் சிலர் முகநூல் வழியாக போலியாக தயாரிக்கப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்பட்ட அலைபேசியை கொள்வனவு செய்த நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அண்மையில் பிக்கெரிங் பகுதியில் சாம்சங் கேலக்ஸி எஸ்-24 ரக அலைபேசி ஒன்று 700 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் சந்தை பெறுவது சுமார் 2000 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் குறித்த அலைபேசி முன் மற்றும் பின் பக்கங்கள் அசல் அலைபேசியை போல காணப்பட்டாலும் அவற்றின் உள் பாகங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது.