Reading Time: < 1 minute
கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 50000 டொலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 500 கிராம் இடையினுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த சந்தேக நகரிடமிருந்து 1500 டொலர் பணமும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
27 வயதான குறித்த நபர் ஆயுத மற்றும் பூஜை பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.