கனடாவில் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஒவ்வொரு 48 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் கொலைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சுமார் 850 பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆண்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பலியாகும் பெண்களின் எண்ணிக்கை கனடாவில் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
நீதி மற்றும் பொறுப்பு கூறலுக்காக கனேடிய பெண் கொலை கண்காணிப்பு அமைப்பினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாழ்க்கைத்துணையினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளினால் அதிகளவான பெண் கொலைகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
24 முதல் 34 வயது வரையிலான பெண்களே அதிகளவில் இவ்வாறு கொலை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் கொலைச் சம்பவங்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.