Reading Time: < 1 minute

கனடாவில் பெண்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் றொரன்டோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வார இறுதியில் குறித்த நபர் பல பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளதாகவும் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண் ஒருவரை குறித்த நபர் பின் தொடர்ந்தார் எனவும், குறித்த பெண் கூச்சலிட்டதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குழுமவும் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மார்க்கம் வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரது முகத்தில் குறித்த சந்தேக நபர் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடமிருந்து கத்தி ஒன்றும் வீடுகளை உடைத்து உள்ளே செல்லத் தேவையான கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.

றொரன்டோவைச் சேர்ந்த ஒலாய்வோலா அடெய்மி என்ற 34 வயதான நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.